அது ஒரு மழைக் காலம்..
அழகான குளிர்க் காலம்…
மேகத்துடன் இடியின் யுத்தம்..
மழை நீர் விழும் சத்தம்…
சென்னை எங்கும் விடுமுறை...
மனம் விரும்பியது மழையை மறுமுறை..
சுவையான குழி பனியாரம்..
சுட சுட காபி..
ஜன்னல் ஒரம் நான்…
மழையை ரசித்தபடி
உணவை ருசித்தபடி…
*(*(*(** இதுக்கு மேல யோசிக்க முடியல..** இதையே ஒரு கதையா Convert பண்ணா என்ன !??!?! Let me Try ;-)
சோம்பல் முறித்து படுக்கையில் இருந்து எழுந்தாள் ப்ரியா…!
அன்றைய அலுவலக பணிகளை மனதில் எண்ணிய படி கடிகாரத்தை பார்த்தாள்...மனி 7-ஐ தாண்டி இருந்தது…
திங்கட் கிழமை காலை அவளை இடி, மழை, மின்னலுடன் வரவேற்றது !!! படுக்கையிலிருந்து துள்ளி குதித்தாள் ப்ரியா..
அடாடா….சம மழை பேயுதே...…`அம்மா….அம்மா' என்றபடி சமையல் அறையை நோக்கி சென்றாள்..
'என்னடி?' ஏன் இப்படி உயிர் போகற மாதிரி கத்தற ??
'Night fulla மழைய மா ??' Brush-இல் paste போட்டபடி கேட்டாள் ப்ரியா..
'ஆமாம்..கரண்ட் வேற நடுல நடுல போயிட்டே இருந்துது..' இதெல்லாம் உனக்கு எங்க தெரிய போகுது…நீ தூங்கினா இடியே விழுந்தாலும் எழுந்துக்க மாட்ட..
'அதுகெல்லாம் கொடுத்து வச்சிருக்கனும் மா…தூக்கம் எல்லாருக்கும் வந்துடாது….சரி சரி சுப்பரா சூடா ஒரு காபி கொடு…
'ம்ம்ம்..இதுக்கு ஒண்ணும் குறைச்சல் இல்ல உனக்கு..நாளைக்கு மாமியார் வீட்டுக்கு போயி பட்டாதான் உனக்கு தெரியும்…
'ஏன் மா எப்ப பார்த்தாலும் பொலம்பற? …அதெல்லாம் நான் பாத்துக்கறேன்…
சரி இன்னைக்கு என்ன டிபன் !? மழைக்கு ஏத்த மாதிரி சூடா எதாவது செய்யி….குழி பனியாரம் இருந்தா பெட்டெர் !
சரி சரி..நீ office-க்கு போன் பண்ணி leave சொல்லிடு….தெரு முக்குல தண்ணி ரொம்ப நிக்குதாம்..நம்ம பால்காரி சொன்னா..…உன்னால போக முடியாது…
'அடடா….சூப்பர்….மழை இப்படி பேயனும்…Office போக முடியாத படி…
இப்பவே நான் என்னோட Manager-க்கு போன் பண்ணி Leave சொல்லிடறேன்'
mm…இந்த மழை வந்தாலே ஜாலிதான்…தெரிஞ்சிருந்தா இன்னும் கொஞ்சம் நேரம் தூங்கிருபேன்…!!
office போக வேண்டிய தொல்லை இல்ல…அந்த லூசு manager-um இன்னைக்கு வராதாம்….அம்மாவிடம் சொல்லிக் கொன்டிருந்தாள் ப்ரியா..
சரி மா…நான் பால்கனி-ல ஒக்காந்து என்னோட சிட்னி ஷெல்டன் புக்-ஒட செட்டில் ஆக போறேன்..என்ன டிச்டர்ப் பன்னாத..
எதையாவது பண்ணு….11:30 க்கு அகல்யா சீரியல் ஆரம்மிச்சிடும்….அதுக்கு முன்னாடி சாப்ட வா…! கரண்ட் வேற போற மாதிரி இருக்கு..
இல்ல மா…எனக்கு இப்ப சாப்பாடு வேண்டாம்…இன்னொரு கப் சூப்பரா ஒரு காபி கொடு..நான் மத்தியானமா சாப்பிடறேன்..
என்ன இருந்தாலும் இந்த மழைல காபி குடிக்கற மாதிரி வருமா?…
ஓரு கையால் காபி சுவைக்க…இன்னொரு கையில் சிட்னி ஷெல்டன் இருக்க…ப்ரியா-வுக்கு நேரம் போனதே தெரியவில்லை..
'அக்கா…அக்கா…' என்றது ஒரு குரல் திடீரென்று…
'யாரது இந்த நேரத்துல ?!'…'அம்ம்ம்ம்மா''' யாருனு பாரேன்..
'நான் உள்ள வேலையா இருக்கேன்..நீ போயி பாரு'..
'ம்ம்….ச…கொஞ்ச நேரம் நிம்மதியா ஒக்கார விட மாடீங்களே'……….முணுமுணுத்தபடி கதவைத் திறந்தாள் ப்ரியா..
'யாரு வேணும் மா' ?
ஆழுக்கு உடையுடன்….சொட்டச் சொட்ட நனைந்த படி இடுப்பில் ஒரு கை குழந்தையுடன் ஒரு 10 வயது சிறுமி…நின்றிருந்தாள்....
' என்னமா…?? என்ன வேணும் ?!
அக்கா…நாங்க இந்த தெரு முனைல இருக்கற குடிசையில இருகோம்…மழை வந்து எங்க மண் குடிசை இடிஞ்சி விழுந்துடுச்சு….அம்மாக்கு அடிப் பட்டு ஆச்பத்ரி போயிருக்காங்க..
'பணமெல்லாம் இல்லமா….அப்பறம் வா..' என்றாள் ப்ரியா..
'அக்கா…எனக்கு பணம் வேண்டாம், சோறும் வேண்டாம்…எங்க வீட்டு விறகு அடுப்பு மழைல நனஞ்சி போயி எரியல…
கூரை இல்லாததால எதூவுமே செய்ய முடியல…கொஞ்சம் சுடு தண்ணீர் கொடுத்தீங்கனா….என்னோட தம்பிக்கு கொடுப்பேன்…அவனுக்கு குளிர் தாங்காது…என்றாள் தன் இடுப்பில் இருந்த குழந்தையைக் காட்டிய படி..!!
அந்த சின்னஞ்சிறு பெண்ணின் கண்களில் ஏக்கம்….
தண்ணீர் தருவார்களா என்ற பதட்டம்…
தம்பிக்கு எதுவும் ஆகக் கூடாதே என்ற நடுக்கம்…
'ப்ரியா கண்களின் ஒரம் நீர்….முதல் முறையாக மழை நிற்க வேண்டும் என்று ப்ரியா மனதார வேண்டினாள்….
அவள் கையில் இருந்த காபி அவள் கண்ணீர் சிந்தி உப்பு கரித்தது..!!!!
9 comments:
Wow ! finally tamil fonts... The kavidhai was nice... But the sirukadhai was super !! :o)))
Looks like kavidhai and kadhai mazhi is polunjing here !!
@somu
Thanks to u buddy for helping me with the tamil fonts :D ! but struggled a bit initially to get hold of it :)
Thanks for your compliments...
amazing JB.. samma causal a arambichi oru touching end koduthurukinga... awesome..
JB
Engayo poiteenga ponga..
Super....
@naikutti,
Nethikku romba vetti...adhaan enna panradhunu theriyama kadhai ezhudhum kalathula eranginen :) Thanx !
@harish,
Thanks :-)
@Kalai,
Romba thanx :-)
nethike sollanum nu ninaichen... kuzhi paniyaram sapiduringala breakfast ku??... inthellam konjum too much... btw, thottuka ennathu -- vengayam and thakali thovayal a??
@naikutti,
Adhu ennoda kadhaiyin kadhaanayagi-oda breakfast ;-) ennodadhu illa..
Wonderful!!
@Kicha,
Thanks :)
Post a Comment