அன்று விடிந்ததிலிருந்து சாம்பசிவத்திற்கு கையும் ஒடவில்லை காலும் ஒடவில்லை....கடிகாரத்தை பார்ப்பதுமாகவும் உள்ளும் வெளியும் நடப்பதுமாகவே இருந்தார்..
தன் ஒரே செல்ல மகள் ப்ரியா-வை இன்று பெண் பார்க்க வருகிறார்கள் என்றதும் காலையிலிருந்து எல்லா பெற்றோர்க்கும் இருக்கும் பதட்டமும் படபடப்பும் அவரிடம் சற்று அதிகமாகவே இருந்தது......
காரணம் அவர் ப்ரியா-வை என்றும் பிரிந்தது இல்லை....ஒரே மகள் என்பதாலோ என்னவோ...அவளை மிகவும் செல்லமாகவும், அன்பாகவும் வளர்த்தார்...! ப்ரியாவும் தன் பெற்றோர் மீது பரிவையும் பாசத்தையும் வைத்திருந்தாள்....
எல்லாவற்றிற்கும் தன்னைச் சுற்றி சுற்றி வந்த பெண்ணா இன்று திருமனத்திற்கு தயாராகி நிற்கிறாள் என்பதை அவரால் சற்று நம்பத்தான் முடியவில்லை..!!!!
'மீனாட்சி....மீனாட்சி...டிபன் எல்லாம் ரெடி தான?...எப்பவும் போடற மாதிரி உப்பு அதிகம் போட்டுடாத....காபி டிகாக்ஷன் போட்டு வச்சிட்டல? மாப்பிள்ளை வீட்டுகாரங்க வர்ர நேரம் ஆச்சு பாரு..''
'அடடா....என்னங்க நீங்க....இதையே எத்தனை வாட்டி சொல்லுவீங்க...?? எல்லாம் ரெடியா இருக்கு...வேனும்னா உள்ள வந்து பாருங்களேன்....' சிறு பிள்ளை போல கவலைப் படும் தன் கனவனைப் பார்த்து சிரித்தபடி கூறினாள்...மனி மூனு-தான் ஆகுது...அவங்க நாலு மனிக்கு மேல வரதாதான் தரகர் சொன்னாரு.....நீங்க கொஞ்ச நேரம் இப்படி ஒக்காருங்க....
'மீனாட்சி..எனக்கு என்னமோ இந்த எடம் நம்ம பொன்னுக்கு ரொம்ப பொருத்தமா இருக்கும்னு தோனுது.....பய்யன் பீ.இ படிச்சிருக்கான்...பெங்கள்லூர்ல இருக்கற ஒரு பெரிய சாப்ட்வேர் கம்பேனில ப்ராஜ்ஜெக்ட் லீட்-ஆ இருக்கான்....மாசம் சொலையா நாப்பது ஆயிரம் சம்பாதிக்கறான்...
'ஆமாங்க....நானும் அப்படித்தான் நெனைக்கறேன்....உங்க ப்ரெண்டு நாராயணன் கூட சொன்னாரே...பய்யன் ரொம்ப நல்ல பய்யன்...ஒரு கெட்டப் பழக்கம் கெடையாது...சிகரெட்,மது இதெல்லாம் மருந்துக்கு கூட தொட மாட்டான் !! நல்லா பழகுவான்...பெரியவங்களுக்கு ரொம்ப மரியாதை கொடுப்பான் அப்படீனு...இந்த எடம் அமஞ்சா நம்ம ப்ரியா ரொம்ப சந்தோஷமா இருப்பா...
'ம்ம்ம்..நான் கூட பய்யன பத்தி விசாரிச்சிட்டேன்...நல்ல குடும்பம்..போட்டோ-வும் ரென்டு பேரும் பாத்தாச்சு...ரென்டு பேருக்கும் ஓகே...நேர்ல ஒரு தடவ பார்த்து பேசியாச்சுனா...எல்லாம் நல்லபடியா..முடிஞ்சிடும்....இன்னும் ரென்டு மாசத்துல நல்ல முகூர்த்தம் கூட இருக்கு...
தன் அறையில் இருந்தபடி இந்த உரையாடலைக் கேட்டுக் கொண்டிருந்த ப்ரியா, மனதிற்குள் நெகிழ்ந்து கொன்டாள்...எல்லா பெண்களுக்கும் உள்ள ஆசையும் கனவும் அவளுக்கும் இருந்தது...ஒரு நல்லவன் தனக்குக் கனவனாக வரப்போவதை எண்ணி மகிழ்ந்தாள்...!!
(சில நாட்களுக்குப் பிறகு........)
அனைவரின் விருப்பபடி ப்ரியா ப்ரதீப் திருமனம் இனிதே நடைபெற்று முடிந்தது...!!
பிரியா விடை பெற்ற ப்ரியா..கனவனின் இல்லத்தில் தொடங்க போகும் இனிய வாழ்வினை வரவேற்க தயாரானாள்......
வந்த விருந்தினர் ஒவ்வொருவராக விடை பெற.....ப்ரியா தன் கனவனிடம் தனிமையில் மனம் விட்டுப் பேச காத்திருந்த அந்த சில நிமிடங்களில் தன் செல் போன் சினுங்க, எடுத்து பேசினாள்.......திருமனத்திற்கு வர முடியத சிலர் அவளுக்கு போனில் வாழ்து தெரிவித்துக் கொண்டிருந்தனர்...
உள் அறை வெராண்டாவில் பேசி முடித்து அறைக்குள் நுழைந்தபோது சில மனித் துளிகளை கடிகாரம் விழுங்கி இருந்தது.....
சற்று தொலைவில் ப்ரதீப் தன்னை வெறித்து பார்த்து கொண்டிருப்பதை கண்டு அவனை ஆசையுடன் அள்ளி அனைக்க ஒடினாள்....
'நில்லுடி.....யாரோட இவ்வளவு நேரம் கொஞ்சி கொலாவிட்டு வர்ர??????
இடியென அதிர்ந்து நின்றாள் ப்ரியா.....
தன் பெற்றோர் கண்ட கனவு ப்ரதீப் வடிவில் கலைவதைக் கண்முன் கண்டாள்...
தன் வாழ்க்கை ஒரு சந்தேக புயலில் சிக்கிச் சிதறுவதை நினைத்து அதிர்ந்தாள்...!!!!!!
-கண்னால் காண்பதும் பொய் !-
காதால் கேட்பதும் பொய் !-
தீர விசாரிப்பதும் பொய் !!!! - என்னும் முடிவுக்கு வந்தாள்...
6 comments:
At 3:41 PM, kicha said...
JB, posting comments for the post "kadhai kathayaam".
good story.
i see that u have used "na" (rendu suli) in the place of "Na" (moonu suli), is it written intentionally? or ur editor doesnt support?
keep kicking!
@kicha,
sorry, somehow the option of leaving a comment got disabled in this post..Just now i had set it right..Btw..the mistake was unintentional...got to get back in touch with writing in tamil...sorry abt the mistake ! and thnx for ur compliment
@Somu,
posting ur comment here ..
"At 4:33 AM, Somu said...
Why am I not able to comment on the last post of yours ? well guess this is one disadvantage of an arranged marriage... there is 50-50 chance of it going it either way !"
@somu,
Yep ! u are right..its nothing but sheer luck to get an arranged marriage work in the way u want :)
good one JB!... tamizh la padikarthuku rembo nalla irruku...
etho movie partha mathiri irunthuthu... "puriyadha puthir" "Aasayil Oru Kadidham"..
hmmm...manaivi amaivadellam.....
@naikutti,
Thanks :)
@harish,
kanavan amaivadhellam....!!!!
@kalai,
enna kalai ;-) purilayaa ?
hmm..just wanted to say even if you scrutinize the background of any person before marriage ...and find everything ok...still these are certain things which cannot be predicted..(sandhega budhi) and all...so its all ur FATE nu solla varen :)
Post a Comment